ரஸீன் ரஸ்மின் / 2017 நவம்பர் 12 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் தளுவகொட்டுவ சந்திக்கு அருகில் இன்று (11) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை, பல்லன்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நதீகா சுபாஷனி (வயது 32) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் சிலாபத்தில் இருந்து கொழும்பை நோக்கிப் பயணித்த லொறியொன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த லொறியானது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த பெண், படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026