2025 ஜூலை 30, புதன்கிழமை

ஜனாதிபதி விருது பெற்றவர் கைது

Editorial   / 2024 மார்ச் 08 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை வலேகடை பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் தொல்பொருட்களை தோண்டுவதற்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் நவீன கார் என்பனவற்றுடன் ஜனாதிபதி விருது பெற்றவர் உட்பட ஐவர்  கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை   குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் கடவத்தையை வசிப்பிடமாகவும், ஏனைய சந்தேகநபர்கள் பண்டாரவளை, கலேவெல, கந்தளை, மீரிகம ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் எனவும், அவர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்   குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளைத் தளபதி ஏ.டி. பண்டார   தெரிவித்தார்.

பூமிக்கு அடியில் பொருட்கள் உள்ளதா எனப் பார்ப்பதற்காக ஸ்கேனிங் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேகநபர் 1999ஆம் ஆண்டு இயந்திரத்தை உருவாக்கி ஜனாதிபதி விருதைப் பெற்ற பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பண்டார தெரிவித்தார்.

 

பூமிக்கு அடியில் உள்ள அனைத்து பொருட்களும் கமராவாகும் வகையில் இயந்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உருவாக்கிய இயந்திரத்திற்கு மற்றுமொரு கமெரா கவனமாக பொருத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்த சந்தேகநபர்கள் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று தொல்பொருள் அகழ்வு செய்ததாகவும், இரண்டாவது தடவையாக ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த புதையல்களை தேடுவதற்காக காரில் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

நீர் திட்டம் அமைப்பதற்காக கிணறு வெட்டுவதாக கூறி அப்பகுதியை தோண்டியதாகவும், அதில் இருந்து கூர்முனை, இரும்பு கம்பிகள், தண்ணீர் மோட்டார்கள், கம்பிகள் போன்ற பல உபகரணங்களை கைப்பற்றியதாகவும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலன்னறுவை பிரதேச புலனாய்வு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி. பண்டார   தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .