2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

டெங்கினால் குழந்தை மரணம்

Editorial   / 2023 நவம்பர் 16 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

தற்போதைய சீரற்ற காலநிலையினால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.  

புத்தளம் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன்,    நகரில் டெங்கு நோய் காரணமாக குழந்தை ஒன்று வியாழக்கிழமை (16) மரணித்துள்ளது.  

நகரசபை செயலாளர் பிரீத்திகாவின்  ஆலோசனைக்கமைய நகரசபை டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.  

எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அவற்றை அழிப்பதுடன் உங்களது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்து உயிராபத்துக்களைத் தவிர்க்குமாறு நகரசபை நிர்வாகம் பொதுமக்களை  வேண்டிக்கொள்கிறது.

மேலும் டெங்கு பரவும் அபாயகரமான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நகரசபையினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .