Niroshini / 2016 ஜூலை 05 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்டுள்ள ஒரு தொகை வலைகள் ஆராச்சிக்கட்டு முத்துபங்தி மீனவக் கிராமத்தின் கடற்கரையில் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கைப்பற்றப்பட்டதாக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முத்துபங்தி மீனவக் கிராமத்தினை அண்மித்த கடற்கரை வலயத்தினுள் தடை செய்யப்பட்ட வலைகளின் பாவனை அதிகரித்து வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் அவதானத்துடன் இருந்து வந்துள்ள நிலையில், சிலாபம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அனுர ஜயசேகரவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அவ்வலுவலக அதிகாரிகள் நேற்று மாலை முத்துபங்தி கடற்கரைப் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஆழ்கடலுக்குக் கொண்டு செல்வதற்கு தயாராக கடற்கரையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஏழு தங்கூஸ் வலைத் தொகுதிகள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பல்வேறு அளவுகளையுடைய கண்களைக் கொண்ட இந்த வலைகளின் பெறுமதி சுமார் ஆறு இலட்சத்துக்கும் அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வலைகளை சிலாபம் நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago