2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தனி சக்கரத்தை தட்டிக்கேட்டவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

Editorial   / 2023 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது மோட்டார் சைக்கிளில் ஆபத்தான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம்    வாத்துவ வெரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த நபரை இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதுடன், உதைத்தும் கைகளால் தாக்கியும் உள்ளனர்.

கடந்த (07) பிற்பகல் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதுடைய துலாஞ்ச ஹேஷாமின் இறுதிக் கிரியைகள் வாத்துவ வெரகம பொது மயானத்தில் புதன்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்றது.

 

அங்கு சுமார் முப்பது பேரடங்கிய இளைஞர்கள் குழு ஒன்று மோட்டார் சைக்கிள்களுடன் ஆர்ப்பாட்டத்துடன் வந்து இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  இறுதி ஊர்வலத்தில் ஆபத்தான முறையில் ஒற்றைச் சக்கரத்துடன் காட்சியளித்தனர்.

 

பலர் அதை வெறுப்புடன் பார்த்தார்கள், ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு நின்றிருந்த  மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தவரை கிட்டத்தட்ட 50 இளைஞர்கள் தங்கள் கைகளால் தாக்கியும் கால்களால் உதைத்தும் உள்ளனர்.  அத்துடன், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.   

எனினும், உள்ளூர் மக்கள் சிலர் பெரும் முயற்சியில் அவரைக் காப்பாற்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை, உடலின் பல பாகங்களில் தாக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .