Editorial / 2017 நவம்பர் 04 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி 150 தேக்கு மரக்குற்றிகளை, இரண்டு லொறிகளில் ஏற்றிச்சென்ற ஐவர், கடந்த வியாழக்கிழமை (02) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், கம்பிரிகஸ்வெவ, தலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை, சுஹதகம பகுதியிலிருந்து ஏறாவூர் பிரதேசத்துக்கு லொறியொன்றில் 50 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் போது, பொலிஸ் நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹொரவ்பொத்தானை, மதவாச்சி சந்தியிலிருந்து தலாவ பிரதேசத்துக்கு லொறியொன்றில் 100 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் போது, சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.


3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago