S. Shivany / 2020 நவம்பர் 11 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, நேற்று (10) புத்தளத்துக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.
புத்தளத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் நாஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செலயகத்தில், அபிவிருத்தி மற்றும் குறைபாடுகளை கேட்டறியும் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, புத்தளம் மாவட்ட கிராமிய அபிவிருத்தி, புத்தளம் மாவட்ட விளையாட்டுத்துறையில் காணப்படும் பிரச்சினைகள், புத்தளம் மாவட்ட பாடசாலை, பாலர் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் மற்றும் வளங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கூட்டுறவுத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான் குழு, சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை, கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுகப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இக்கலந்துரையாடலில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, வைத்தியர் சீதா அரம்பேபொல, பியல் நிசாந்த டீ சில்வா, லசந்த அழகியவன்ன, சனத் நிசாந்த பெரேரா, பியங்கர ஜயரத்ன உட்பட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , நகர, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மாவட்ட அமைப்பாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் புத்தளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கு நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை பார்வையிட்டார். 
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026