2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நீதிபதியின் காரை திருடியவர் சிக்கினார்

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை வாடகைக்கு பெறுவது போல சென்று  இரண்டு மாடி வீட்டில் நீதிபதியை வைத்து பூட்டிவிட்டு காரையும் சந்தேகநபர் திருடிச் சென்றார்.

மேலதிக நீதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர், கார் மற்றும் காரில் உள்ள ஆவணங்களை ஒப்படைக்க 5  இலட்சம் ரூபாய் வழங்குமாறு கேரியுள்ளார்.

அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிபதியின் சகோதரன் போல் நடித்த பொலிஸ் உத்தியோகத்தர், நீதிபதி அவசரமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காரை திருப்பி கொடுப்பதற்கு பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,  27 வயதுடைய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்துக்கு அழைத்து அவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .