2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தளம் வான்வீதி தொடக்கம் மணல்குன்று வரையிலான வீதி புனரமைப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 25 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம், வான்வீதி தொடக்கம் மணல்குன்று வரையிலான வீதி காபட் இடுவதற்கான ஆரம்ப பணிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த வீதியின் காபட் இடுவதற்கான ஆரம்ப நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ், அஷ்ஷெய்க் முபாறக் மொளலவி (ரஷாதி) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், அக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியோரின் முயற்சியால் குறித்த வீதியைப் புனரமைப்புச் செய்ய 6 கோடி 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X