Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மே 18 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
சீரற்ற காலநிலையின் போது கல்பிட்டி வீதி மாம்புரி குடாவ கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாம்புரி கொலனிப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய எட்வட் பெர்னாந்து (66 வயது) என்பவரே உயிரழந்துள்ளார்.
குறித்த தினத்தன்று மாலை வழமைபோன்று தந்தையும் மகனும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அன்று மாலை 05 மணியளவில் வீசிய திடீர் சூறாவளியின் காரணமாக அவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.
எனினும், தந்தையை தனது தோழில் சுமந்த மகன், தன்னை சுதாகரித்துக்கொண்டு படகின் உள்ளே அகப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கலன் மூலம் தனது தந்தையைக் காப்பாற்றலாம் என எண்ணி படகினைக் கெட்டியாகப் பிடிக்கசொல்லி விட்டு மண்ணெண்ணெய் கலனைத் தேடிய போது துரதிஷ்டவசமாக இருவருமே நீரில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் கடற்படையின் உதவியுடன் தேடிய போது அன்றிரவு 09 மணியளவில் மகன் மீட்கப்பட்டார்.
எனினும், தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை (17) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
28 minute ago
42 minute ago