Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
ஆனமடுவ- கன்னங்கர ஆரம்ப பாடசாலையில்,483 இலட்சம் ரூபாய் செலவில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம், பயன்பாடின்றிக் காணப்படுவதாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
3,000 மாணவர்கள் கல்வி பயின்று வரும் மேற்படி பாடசாலையில், போதியளவு கட்டட வசதி இன்மையால், கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கு அமைய, கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இக்கட்டட நிர்மாணிப்பில் சில குறைப்பாடுகள் காணப்படுவதையிட்டு, இதனை பன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள முடியாதுள்ளதாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் நிமல் அபேசிங்க தெரிவித்தார்.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026