2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பரீட்சைக்கு தோற்றிய மாணவன் மரணம்

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் தாம் பரீட்சையில் சித்தி எய்த தவறக்கூடும் எனக் கருதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று பொலன்னறுவை அரலகன்வில பகுதியில் பதிவாகியுள்ளது.

அரகன்வில மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த இசான் தினித் சந்திரசிறி என்ற மாணவனே நேற்று  (18) தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் நடைபெற்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடப்பரீட்சையில் ஒரு பாடத்திற்கு மாத்திரம் தோற்றியதன்  பின்னர் தமது வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த மாணவனின் தந்தை அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X