2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பலத்த காற்றால் 40 க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

புத்தளம்- மஹவெவ பிரதேச செயலகப் பிரிவில், நேற்று (17) மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக,40 க்கும் மேற்பட்ட வீடுகள், மீனவ வாடிகள் சேதமடைந்துள்ளனவென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹவெவ விஹாரை சந்தியில் பாரிய அரச மரக் கிளை ஒன்று முறிந்து விழுந்ததால், சிலாபம்- கொழும்பு பிரதான வீதியுடனான  போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹவெவ, தொட்டுவாவ, குடாமடுவெல்ல பகுதிகளில் அமைந்துள்ள மீனவக் குடியிருப்புகள், வாடிகள் என்பனவே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

காற்றினால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பில் ஆராய, மஹவெவ பிரதேச செயலக அலுவலகமும்  புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும்  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X