Gavitha / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நேற்று (22) தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில், குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை – சப்புகஸ்கந்தை, கொழும்பில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக, இரண்டு துறைமுகங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்றும் இதற்கு பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில், இந்தத் திட்டத்துக்கு 100 ஏக்கர்களை முதல் கட்டமாக பயன்படுத்த, துறைமுகங்களுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026