Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்டத்தில், மாதிரி நாடாளுமன்றம் ஒன்றை தோற்றுவிக்க, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் துரித ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
புத்தளம் மாவட்டத்தின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அபிவிருத்திகளை கலந்துரையாடி, திட்டமிட்டு, செயற்படுத்தும் நோக்கில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு, ஒரு மாதிரி பாராளுமன்ற அமைப்பின் மூலமாக, மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு பொறிமுறையை உருவாக்கும் பொருட்டே, மாதிரி நாடாளுமன்றம் உருவாக்கப்படவுள்ளது.
இந்த அமைப்பில் இணைந்து செயற்பட விரும்புவோர் தங்களது பெயர், பிரதேச செயலாளர் பிரிவு, கிராமம், பால், வயது, தொழில் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறுந் தகவல் மூலமாகவோ, வட்ஸ் அப் மூலமாகவோ 0767250050 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைத்து பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் இந்த செயற்திட்டத்துக்கு ஆண்கள், பெண்கள் என சகல துறை சார்ந்தவர்களினதும் பங்களிப்புகளை கோருவதாக, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago