2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் வளர்பிறை மீன்பிடி சங்கத்துக்கு இருமாடி கட்டடம்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூலை 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் வளர்பிறை மீன்பிடி சங்கத்துக்கு 60×25 இருமாடி கட்டடமொன்றைப் பெற்றுக் கொடுக்கும் பணியில் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்சி செயற்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலம் எடுத்த முயற்சியின் பலனாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள புத்தளம் உதவிப் பணிப்பாளர் ஏ.ஜீ. விக்ரமசிங்க மூலம் கொழும்பில் உள்ள பணிப்பாளர் நாயகத்துக்கு சிபாரிசு செய்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட பணியைத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியிடம் வளர்பிறை மீன்பிடி சங்க செயலாளர் என்.எம். ரியாஸ், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்சி, புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ. செயலாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் இன்று காலை (08) கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போதையக் கட்டடம் 1989இல் நிர்மாணிக்கப்பட்டதுடன், அங்கு முன்பள்ளி மற்றும் காரியாலயம் என்பன இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X