Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(துஷித குமார த சில்வா)
பேருவளை கடற்கரை விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், பாவனைக்கு உதவாத படகுகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதால், டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏராளமான படகுகள், மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழைக் காலங்களில் இந்தப் படகுகளில் நீர் தேங்குவதால், நுளம்புகள் பெருகுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதலால், இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago