Kogilavani / 2017 நவம்பர் 16 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}



ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம் நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலை மேற்கொண்டவரை கைதுசெய்யுமாறு கோரியும் பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சுத்திகரிப்பாளர்கள் புத்தளம் நகரசபைக்கு முன்பாக, நேற்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரான எம்.சுரேஸ் என்பவர் மீது, கடந்த 13ஆம் திகதி, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் பஸ் டிப்போவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானப் பணி தொடர்பில், ஆராய்ந்து பார்ப்பதற்காகச் சென்றபோது, மேற்படி பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனைக் கண்டித்தே மாநகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சுத்திகரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் புத்தளம் நகரில் கழிவுகள் குவிந்துக்கிடக்கின்றனவெனவும் இதனால் பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பத்துடன் தொடர்புடையவரை கைதுசெய்யும்வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடருமென, பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் நகர சுத்திகரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago