2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் சிக்கிய பிரதேச சபை

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

மஹவெவ பிரதேச செயலகத்தால், மக்களுக்கு பகிர்ந்தளிக்க கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு பொருள்கள், மக்கள் பாவனைக்கு உகந்ததாக காணப்படாமையால், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அவற்றை குழிதோண்டி புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரிசி, வெங்காயம், நெத்தோலி, உருளைக்கிழங்கு, சீனி என்பன அடங்கிய பொதியை, 1,000 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குவதற்காக, மஹவௌ பிரதேச சபை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளது.

குறித்த பொதியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை செய்தபோது, அவை பாவனைக்கு உகந்தவையல்ல என்பது தெரியவந்துள்ளது.   

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X