2025 மே 03, சனிக்கிழமை

பொலன்னறுவையில் 846 பேர் போட்டி

Editorial   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இம்முறை  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் 846 ​வேட்பாளர்கள் களமிறங்குவதாகவும், ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது கட்சிகளுக்கிடையில் ஒன்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும், பொலன்னறுவை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கடைப்பிடிக்க வேண்டிய சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று முன்தினம் (26) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  பொதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதுடன், வாக்கெண்ணும் நடவடிக்கையின் போது கூடுதலான பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஜனவரி 10 ஆம் திகதியளவில், உயிரிழந்தவர்கள் மற்றும் வெ ளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களின் விவரங்களை கிராம உத்தியோகத்தர் அறிந்திருத்தல் வேண்டும் என்பதுடன், அவர்கள்  தொடர்பான பட்டியலை ஜனவரி 12 ஆம் திகதி பொலன்னறுவை தேர்தல் அலுவலகத்துக்கு கையளிக்க வேண்டும் எனவும், பொலன்னறுவை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரஞ்சித் ஆரியரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரச்சினைகள் எழாத வகையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ,​அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X