2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

போலியாக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டுவந்த இருவரை,  சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில்  நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ-அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை கைதுசெய்து விசாரணைசெய்தபோதே, மேற்படி சம்பவம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய ஆவணங்கள் உள்ளிடவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

போலி சாரதி அனுமதிப் பத்திரத்தை தயாரிப்பதற்காக நபரொருவரிடமிருந்து 40,000 ‌ரூபாய் அரவிடப்பட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணைகள்  மூலம் தெரியவந்துள்ளது.

கைதான 67, 28 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரையும் இன்று (26) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .