Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 04 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்;தளம், முந்தல், திரௌபதை அம்மன் கோயிலின் வருடந்த மகோற்சவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) திகதி உட்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது, இவ்விழாவானது 18 நாட்கள் கொண்ட மகோற்சவத்தில், நடைபெறுகின்றமை இக்கோயிலின் சிறப்பம்சமே,
மகோற்சவத்தில், உட்கொடியேற்றம், வெளிக்கொடியேற்றம், மாலையிடுதல், திருக்கல்யாணம், வஷ்திராபரணம், வனவாசக்காட்சி, தவநிலைக்காட்சி, அக்கினிக்குண்டக் காவல், தீமிதிப்பு போன்ற விழாக்கள் நடைபெறும்.
கிராமிய வழிபாட்டு அம்சங்களில் திரௌபதை அம்மன் வழிபாட்டு முறையும் ஒன்று. இக்கோயிலானது 1660-1700 இடைப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாக இங்கு செறிந்துவாழும் மீனவ மக்களைக் காக்கும் குல தெய்வமாகவும் திரௌபதை அம்மன் விளங்குகின்றார்.
மகாபாரதக் கதையில், „திரௌதையின் சபதம்... முற்றுப்பெற்றதை நினைவூட்டும் முகமாக, இவ்வுற்சவம் கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நாள் உற்சவமாக நிகழ்வுறும் இது அதிமுக்கிய வைபவமாகும். கருவறைவியல் உள்ள திரௌபதை அம்மனின் முன்னதாகச் சுடர்விட்டெரியும் தூண்டாமணி விளக்கிலிருந்து தீ எடுக்கப்படுகின்றது. ஹோமத் தீ வளர்க்கப்படுகின்றது.
தீ மிதிப்புக்கான எரிக்கப்படும் மரக்கட்டைகளுக்கான தீயானது, உடப்பு ஸ்ரீ வீரபத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு வந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்து எரிக்கப்படும். ஆலயப்பந்தலில் மகாபாரத்தத்தின் 18 நாள் போர்ச்சுருக்கம் படிக்கப்பட்டு பொருளுரையும் வாசிக்கப்படும். திரௌபதை சபதம் நாடகமாக நடித்தும் காட்டப்படும்.
அதன்பின்னர் தீ மிதிப்பு வைபவம் நடைபெறும். தீ மிதிப்பு விழா நிறைவடைந்ததும் அடுத்த நாள் அம்பாள் பவனி வருவதுடன், கொடியிறக்கும் வைபவம், தர்மராஜனின் பட்டாபிஷேகம் என்பன நடைபெற்று மகோற்சவம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். இத்திருவிழாவானது எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை நிறைவடைய உள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago