Editorial / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட கணவனை குற்றவாளியாக இனங்கண்ட புத்தளம் மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி தமரா விக்கிரமசேகர இந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை (26) புத்தளம் மேல் நீதிமன்றில் வைத்து பிறப்பித்தார்.
நவகம முள்ளேகம கோவில் வீதியை சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் மன்னப்பெரும மு சுசில் பண்டார என்ற வயது ( 33) என்ற நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2015 ஜூலை 22 அன்று, மாலையில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தனது மனைவியான துஷாரி காஞ்சனா (வயது 27) என்பவரை கூரிய ஆயுதத்தால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் பெண் ஒரு குழந்தையின் தாயாவார்.
இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதி நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக நீடித்த நீண்ட விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முடிவு செய்த நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தூக்கிலிடுவதற்கான திகதியில் தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார்.
13 minute ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
5 hours ago
5 hours ago
7 hours ago