Editorial / 2017 நவம்பர் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
மாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் வென்றெடுத்த பதக்கங்கள் இரண்டு, பாடசாலை அதிபரின் அலுவலகத்திலிருந்து காணாமல் போயுள்ள சம்பவமொன்று, ஆனமடுவ பகுதியில் பதிவாகியுள்ளது.
வித்யாசாகர வித்தியாலயத்தின் வரலாற்றில் முதற்தடவையாக, சிங்களம், தேசிய சாகித்திய போட்டிகளில் வெற்றிபெற்ற கசுனி தேஷானி என்ற மாணவியின் பதக்கங்களே, இவ்வாறு காணாமல் போயுள்ளனவென, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரம் 8இல் கல்வி பயிலும் குறித்த மாணவியின் பதக்கங்கள், பாடசாலை அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பாடசாலைக் கூரையை உடைத்த கொள்ளையர்கள், அதிபரின் அறைக்குள் சென்று, மாணவியின் பதக்கங்களைத் திருடிச் சென்றுள்ளனர். அதிபரின் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 4,000 ரூபாய் பணமும் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு தடயவியல் நிபுணர்களின் உதவியையும் நாடியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026