2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சார சைக்கிள் தயாரிப்பு

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ரஸீன் ரஸ்மின்

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் கூடுதலான ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.

மின்சாரத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் மீதான மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

புத்தளம் நகரைச் சேர்ந்த அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் மின்சாரத்தில் ஓடக்கூடிய துவிச்சக்கர வண்டியைத் தயாரித்துள்ளார்.

தனது சொந்தத் தேவைகளுக்காக மட்டுமே மேற்படி மின்சார துவிச்சக்கர வண்டி தயாரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதனூடாக செலவுகளைக் குறைத்து, மேலதிக பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளார்.

இந்த துவிச்சக்கர வண்டியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 20 முதல் 25 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்யலாம். இதில் ஜீ.பி.எஸ் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமே இந்த துவிச்சக்கர வண்டி எத்தனைக் கிலோ மீற்றர் தூரம் ஓடும் என்பதை சரியாக கணிக்கலாம்.

12 வோல்ட் பெட்டரியை பயன்படுத்தி அதிலிருந்து ஏ.சி மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த துவிச்சக்கர வண்டியானது மோட்டர் ஒன்றின் உதவியுடன்  இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள பற்றரிக்கு மேலதிகமாக இன்னொரு பற்றரியை பொருத்தினால் சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கலாம் என்றார்.

பெற்றரியில் மின்சாரம் குறைவடையுமாயின், பெடல் மூலமும் இந்த  துவிச்சக்கர வண்டி இயக்க முடியும் என்றார். தற்போதைய நிலைமையில், மின்சார துவிச்சக்கர வண்டியொன்று 3 இலட்சம் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

ஆனாலும், ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைவான செலவில் மேற்படி மின்சார துவிச்சக்கர வண்டியைத் தயாரித்துள்ளதாகவும் பெரியவர்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மேற்படி மின்சார சைக்கிளை தயாரிக்க முடியும் எனவும் அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

 

ஆனாலும், ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைவான செலவில் மேற்படி மின்சார துவிச்சக்கர வண்டியைத் தயாரித்துள்ளேன். பெரியவர்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மேற்படி மின்சார சைக்கிளை தயாரிக்க முடியும் எனவும் அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் நம்பிக்கை வெளியிட்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X