Editorial / 2018 மே 07 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் இன்று (7) அதிகாலை முதல், கடும் இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்ட நிலையில், 3 வீடுகள் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி, உடமைகள் சேதமாகியுள்ளன.
மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளே, இவ்வாறு மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள, பெறுமதிமிக்க மின் சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடைமைகளும் சேதமடைந்துள்ளன.
மேலும், வீடுகளில் உள்ள தென்னை மரங்கள் மீதும் மின்னல் தாக்கியபோதும், இதன்போது, உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றாலும், குறித்த வீடுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட அனைவரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேசச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் போன்றோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026