Editorial / 2023 நவம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago
7 hours ago