Editorial / 2020 செப்டெம்பர் 06 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்டத்தில் மொழி உரிமை தொடர்பான அறிவை மேம்படுத்தல் மற்றும் மொழி உரிமை மீறல் தொடர்பான ஆய்வு போன்றவற்றை உள்ளடக்கிய விஷேட செயலமர்வு, புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள, சேனாதிலக உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில், நேற்று (05) நடைபெற்றது.
புத்தளம்- சேஞ்ச் தொண்டு நிறுவனம் இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்து.
மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர்கள், ஊடக துறையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்தப்படுத்துவோர், சமூக, அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டுக் குழுக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
சேஞ்ச் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.சீ.எம்.தாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக சட்டத்தரணி ஜீவனி காரியவசம், சயில்ட் விஷன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.சீ.எம்.ருமைஸ், மனித உரிமை ஆணைக்குழுவின் புத்தளம் பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி எம்.அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர் ஜமீனா இல்யாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026