2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரூ. 4 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரயங்கர ஜயசிங்க

புத்தளம் - கற்பிட்டி, மான்பூரி கடற்கரையில், 100 கிலோகிராம் கேரள கஞ்சாவை, கொழும்புக்கு கடத்த முயற்சித்த சம்பவமொன்றை, கொழும்பு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முறியடித்த சம்பவமொன்று, நேற்று செவ்வாய்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியானது எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின், இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலமாகவே, மேற்படி தொகை கேரள கஞ்சா, இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள், கற்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X