Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்)
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, மாதம்பைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த போதை மாத்திரை விற்பனையோடு தொடர்புடைய பெண் ஒருவருடன், முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்துள்ள மாதம்பைப் பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடமிருந்து 2,600 போதை மாத்திரைகள் அடங்கிய 26 பெட்டிகளையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (28), குறித்த பெண் தற்காலிகமாக வசித்து வந்த மாதம்பைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை, மாதம்பைப் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் போது அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்து இதே வகையைச் சேர்ந்த மேலும் 6,000 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மொத்தமாக 8,600 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, அவற்றின் பெறுமதி 3 மில்லியன் ரூபாய் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026