2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

ரோஹிதவின் கையை தட்டிவிட்ட மஹிந்த

Editorial   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம்,   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் நேற்று (09) நடைபெற்றது.

இவ்விருவரும் ஒரே நேரத்தில் மேடைக்கு ஏறி, மக்களை நோக்க கைகளை உயர்த்தி காண்பித்த வண்ணம் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பித்து கைகளை அசைத்துக்கொண்டிருந்தார். பிரதமர் தனது வலது கையை மட்டுமே உயர்த்தி காண்பித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்பாக நின்றுகொண்டிருந்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதமரின் இடது கையை பிடித்து தூக்கி காண்பிப்பதற்கு முயற்சித்தார். எனினும், இடது கையை வேகமாக இழுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ரோஹிதவின் கையை தட்டிவிட்டார்.

இந்நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் போன, அமைச்சர் ​ரோஹித அபேகுணவர்தன, அமைதியடைந்தார்.

இது தொடர்பில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .