Niroshini / 2016 ஜூன் 07 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி வீரபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேகக் கட்டுப்பட்டை இழந்த பிக்கப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பிக்கப் வாகன சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணம் செய்ததாகவும் சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago