2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விசேட வைத்திய நிபுணராக நடித்தவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மே 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

விசேட வைத்திய நிபுணர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணத்தை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை  நடத்திவந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

திவுலபிட்டிய, ரோயல்பார்க், பலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜபக்ஸ கெதர உபாலி ரத்நாயக்க (43 வயது) என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுளள்hர்.

சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டார்.

விசேட வைத்திய நிபுணர் என்று தன்னை இனங்காட்டிக்கொள்ளும்  குறித்த நபர் பல்வேறு வியாபார நிலையங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் நெருங்கிப்பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதுடன், அந்த நிறுவனங்களில் சேவையையும் பெற்றுக்கொள்வார்.

பின்னர்  பல்வேறு முறைகளை பயன்படுத்தி அந்த வியாபார நிலையங்களின் பணம், காசோலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X