2025 மே 14, புதன்கிழமை

வாடகை செலுத்துமாறு அறிவித்தல்

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கல்பிட்டி நகரில் நீண்டகாலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு வாடகைப் பணத்தைச் செலுத்துமாறு கோரி அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு மேல் உரிய வகையில் வாடகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இவ்வாறு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் கே.பி.சந்தனகுமார தெரிவித்தார்.

உரிய முறையில் கடைகளுக்கான வாடகைப் பணத்தைச் செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே பல தடவைகள் அறிவிப்பு விடுத்தும், இதுவரை அவர்கள் பணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பத்து கடைகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைப் பணத்தை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி பிரதேச சபையின் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து வாடகைப் பணம் செலுத்தாத கடைகளுக்கு நேற்று வியாழக்கிழமை  காலை அறிவித்தல் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .