Niroshini / 2016 மே 14 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை கொத்தாந்தீவு வீதியின் கடையாமோட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரங்குளி ஜின்னாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது நசார் இம்ரான் (வயது 17) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பிண்ணிக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இளைஞர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago