2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

Niroshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பிலிருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து புரண்டு மதகுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்ததுடன், பின்னாசனத்தில் இருந்து பயணித்தவர், படுகாயங்களுக்குள்ளான நிலையில், திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து, ஞாயிற்றுக்கிழமை (03), இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X