Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 12 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் தன்னுடைய தந்தையுடன் பயணித்த 5 வயது சிறுவன், விபத்தில் பலியானதுடன், அந்த சைக்கிளில் பயணித்த ஏனைய மூவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5.50க்கு இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சியாகம, ரெசினா சந்திப் பகுதியில் நொச்சியாகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர், பின்னால் பயணித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மற்றுமொருவரும் தம்புத்தேகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், 5வயதான சிறுவன் மரணமடைந்துள்ளான். இதேவேளை, விபத்துடன் தொடர்புடை லொறி சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .