Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்
பெண்கள் அன்றாடம் முகங்கொடுக்கக் கூடிய பிரச்சினைகள் தொடர்பில், வடமேல் மாகாணத்தில் பெண்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை, முன்னெடுக்க வடமேல் மாகாண மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் லக்ஷமன் வேடறுவவின் ஆலோசனைக்கமைய, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதை ஒழிப்பு, தொற்று அல்லாத நோய்கள், நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்தல் மற்றும் சமையறை முகாமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மகளிர் அபிவிருத்தி அதிகாரிகள் 46 பேர் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களின் தலைமையின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025