2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வருடாந்த கல்லூரி விழா

Princiya Dixci   / 2016 மே 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரியின் வருடாந்த கல்லூரி விழா, நேற்று வெள்ளிக்கிழமை (27) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.சஹீரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகு ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர்களான எம்.எஸ்.சேகு அலாவுதீன், எம்.எச்.எம்.மின்ஹாஜ், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். முஸம்மில், ஏ.எச்.எம். ரிஸ்வி உள்ளிட்ட புத்தளம் வலயம், புத்தளம் மெற்கு கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X