2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசர்நாய் விவகாரத்தை மறுத்தலித்தார் அமைச்சர்

Freelancer   / 2022 ஜூன் 23 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அநுராதபுரத்தில் விசர்நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் விசர்நாய் கடிக்கான மருந்து இல்லை என்பதால் உயிரிழந்துள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முற்றாக மறுத்துள்ளது.

விசர்நாய் கடி உள்ளிட்ட 14 மருந்து பொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நகரசபைகள் நாய்களுக்கு முறையாக ஊசிகளை செலுத்தவேண்டும். நாய் கடித்த பின்னர் மனிதருக்கு ஊசி போடும் செயல் முறையை முற்றாக தவிர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

விசர் நாய்க் கடிகளுக்கு தேவையான மருந்துகளைக் கொள்வனவு செய்ய அதிகளவான நிதியை அரசாங்கம் செலவிடுகிறது. 

நான்கு, ஐந்து வாரங்களுக்கே மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படும். எனினும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் தொடர்பில் பேசுவதற்கான தேவை ஏற்படாது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .