2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

விபத்தில் உபபொலிஸ் பரிசோதகர் படுகாயம்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஹலாவத்த-குருநாகல் வீதி, விலத்தவ, கச்சகடுவ பிரதேசத்தில், நேற்று (30) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஹலாவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹலாவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் விஜேவர்தன என்பவரே, இவ்வாறு காயமடைந்துள்ளார். 

அவர் தனது கடமைகளை முடித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே பயணித்த மானொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .