Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் முஸப்பிர்
புத்தளம், பாலாவி நாகவில்லு பிரதேசத்தில், திங்கட்கிழமை (18) இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 10 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி, நேற்று (21) உயிரிழந்துள்ளார் என்று, புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிரான்பத்து பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.தனுசனா (வயது 10) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது தந்தையுடன், கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெறுவதற்காக வந்த நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து அவர்கள் பயணித்த வான், புத்தளம் பாலாவி நாகவில்லு பிரதேசத்தில் வைத்து, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்தக்குள்ளாகியது.
இந்த விபத்தில் நால்வர் பலியானதுடன், பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், அவரதுத் தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
39 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
57 minute ago