2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்

Editorial   / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட் நிரோஷன் (வயது 50) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் 24  வயதுடைய மகள் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் மஹா வெவ நகருக்கு அருகில் தனது மகளுடன் உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பிய வேளையில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வேன் குறிப்பிட்ட அரச நிறுவனத்திற்கு சொந்தமான வேன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் சாரதியின் நித்திரை கலக்கத்தால் வான், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து வீதியின் ஓரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .