Editorial / 2018 மே 09 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின், பாலாவி- தல்கஸ்கந்த பகுதியில் இன்று (09) காலை கனரக வாகனமொன்று வீதியின் நடுவே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த, தனியார் ஆலையொன்றுக்குச் சொந்தமான கனரன வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து சோள மா மூடைகளை ஏற்றிக்கொண்டு நீர்கொழும்புக்கு சென்ற போதே, குறித்த கனரக வாகனம் இன்று காலை 6.10 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸார் தெரிவிதத்னர்.
கனரக வாகனத்தின் பின்பக்க சில்லு கழன்றமையால், குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே குடைசாய்ந்துள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தையடுத்து சுமார் நான்கு மணித்தியாலயங்கள் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago