2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சமூகத்திலும் நாம் எமது அக்கறையை செலுத்துகிறோம்: ஏசியன் குரூப் ஒஃவ் கம்பனி தலைமை அதிகாரி

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


கஷ்டப்பட்டு உழைத்து, வாழ்வில் பல தடைகளை தாண்டி சுமார் 3 தசாப்த காலப்பகுதிக்கு பின்னர் தமக்கென ஒரு வியாபாரத்தை கொண்டு நடத்துவது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. இன்றைய காலகட்டத்தில் இவ்வாறு உயர்ந்தவர்களை இனங்காண்பது என்பது கடினமான ஒரு காரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர்கள் தம்மை வெளிச்சமுதாயத்துக்கு இனங்காட்டிக் கொள்வதை பெருமளவு தவிர்த்துக் கொள்வார்கள்.

இவ்வாறு தமது கடின உழைப்பின் மூலம் உயர்வடைந்த ஒரு தமிழ்பேசும் வர்த்தக பிரமுகரை சந்திக்கும் வாய்ப்பு தமிழ்மிரரின் “உழைப்பாளிகள்” பகுதிக்கு அண்மையில் கிட்டியிருந்தது.

இலங்கையில் அலுமினியம், நிர்மாணம், அலுவலக சாதனங்களை விற்பனை செய்வதில் தனக்கென தனிச்சிறப்பு நாமத்தை பதிவுசெய்துள்ள ஏசியன் குரூப் ஒஃவ் கம்பனிஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹாஜா ஹுசைனுடன், அவரது சாதனைப் பயணம், மற்றும் அவரின் வர்த்தக நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன போன்ற விடயங்களை கேட்டபோது,
1984ஆம் ஆண்டு சுமார் 30 பேரை கொண்டு எனது சகோதரருடன் இந்த வியாபார நடவடிக்கையை புறக்கோட்டைப் பகுதியில் நான் ஆரம்பித்திருந்தேன். அக்காலப்பகுதியில் இலங்கையில் அலுமினிய பொருத்தல் பாகங்கள் என்பது புதிய அறிமுகமாக காணப்பட்டது. இதனால், இந்த தயாரிப்புகளுக்கு சிறந்த கேள்வி காணப்பட்டது. தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் இந்த வியாபார நடவடிக்கையை எனது சகோதரருடன் முன்னெடுத்திருந்த பின்னர், 1993ஆம் ஆண்டில் சுயமாக நான் இந்த வியாபார நடவடிக்கைளை முன்னெடுக்க தீர்மானித்தேன். பின்னர் 1995ஆம் ஆண்டில் மருதானை பகுதியில் நாம் சுமார் 2 வருட காலப்பகுதிக்கு எமது வியாபார நடவடிக்கைகளை ஒரு கிளை நிறுவனத்தினூடாக முன்னெடுத்திருந்தோம்.

ஏறத்தாழ 2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மஹாவித்தியாலய மாவத்தையில் அமைந்துள்ள எமது தலைமைக் காரியாலயம் மற்றும் காட்சியறை பகுதியில் எமது வியாபார நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சமாக, 2008ஆம் ஆண்டு 6 அடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடத்தொகுதியில் எமது வியாபாரம் விஸ்தரிக்கப்பட்டது.

எம்மிடம் அலுமினியம் சார்ந்த உதிரிப்பாகங்களுடன் தொடர்புடைய ஏராளமான தயாரிப்புகள் காணப்படுகின்றன. வெவ்வேறு துறைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாம் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளோம். இதன் காரணமாக எமது வியாபாரம் சுமூகமாக இடம்பெறுவதுடன், ஏனைய துறைகளை சேர்ந்தவர்களுக்கும் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. எம்மிடம் காணப்படும் தயாரிப்புகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொள்வனவு செய்து கொள்வதற்காக விற்பனைக்குள்ளன. இதன் ஒரு கட்டமாக, எமது தயாரிப்புகளை, 3 தளங்களை கொண்ட எமது காட்சியறையில் பார்வையிடக்கூடிய ஒழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது வியாபார நடவடிக்கைகளை படிப்படியாக விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். அதற்காக நாட்டின் பல பாகங்களிலும் கிளை நிறுவனங்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளோம்.

எமது விற்பனை பொருட்களை பெருமளவில் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும், ஒப்பந்த அடிப்படையில் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனத்தாரும் பெருமளவில் மொத்தமாக கொள்வனவு செய்கின்றனர். உதாரணமாக ஹோட்டல் துறையை குறிப்பிட முடியும். நாட்டில் சுமார் 3 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டு வருகிறது. இந்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி பணிகளுக்கு அமைவாக பல புதிய ஹோட்டல்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த ஹோட்டல் நிர்மாணப்பணிகளுக்கு அவசியமான அலுமினியம் மற்றும் இதர பொருட்களை எம்மிடமிருந்து கொள்வனவு செய்வதில் பலர் அக்கறை செலுத்துகின்றனர். விசேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து வருகை தருவோர் எம்மிடம் தமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தடைகள் எதுவுமின்றி எமது பொருட்களை விநியோகிக்கக்கூடிய வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது. இந்த நிலையை நாம் வரவேற்கிறோம். அத்துடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு அமைவாக நாட்டின் எந்தப்பகுதிக்கும் பொருட்களை விநியோகம் செய்யும் சேவையையும் வழங்குகிறோம்.

நாம் விற்பனை செய்யும் பொருட்கள் சர்வதேச தரம் வாய்ந்த பொருட்களாக அமைந்துள்ளன. எங்களது பிரதான விற்பனை சாதனங்களான அலுவலக, வீட்டு சமையலறை தளபாடங்கள் போன்ற அனைத்தும் சந்தை விலையை விட குறைவான விலையிலேயே விற்பனையாகின்றன.

எமது நிறுவனம் அடுத்தகட்ட நிலையை நோக்கிய நகர்வை தற்போது முன்னெடுத்துள்ளது. ஒரு சாதாரண வியாபார நிறுவனம் எனும் கட்டத்திலிருந்து சமூக பொறுப்புணர்வு வாய்ந்த ஒரு கூட்டாண்மை நிறுவனம் எனும் நிலையை அடையும் வகையில் தனது ஆரம்பகட்ட விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

எமது வியாபாரத்தின் முக்கிய பங்கை வகிக்கும் எமது ஊழியர்களின் நலனில் நாம் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம். இவர்களுக்கு கம்பனி சட்ட கோவைக்கு அமைவாக விடுமுறைகள், மேலதிக வேலை நேர கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக விடுமுறை தினங்களில் விடுமுறைகள் போன்றன வழங்கப்படுகின்றன.

எமது ஊழியர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்துவதை போலவே சமூகத்திலும் நாம் எமது அக்கறையை வெளிப்படுத்தி வருகிறோம் என்றார்.

ஏசியன் குரூப் ஒஃவ் கம்பனிஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் காட்சியறையும் தலைமைக்காரியாலயமும் இல.47, மஹாவித்தியாலய மாவத்தை, கொழும்பு-13 எனும் முகவரியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X