2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பத் வங்கியுடன் இணைந்து டயலொக் Tourist Fuel Passஐ அறிமுகப்படுத்துகிறது.

J.A. George   / 2022 ஒக்டோபர் 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருளுக்கான தடையற்ற அணுகல் - Ceypetco, IOC மற்றும் MillenniumIT ESP ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

 டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சின் அழைப்பின் பேரில் சம்பத் வங்கி பிஎல்சியுடன் இணைந்து, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நிலையான ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் இன்றி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள உதவும் Tourist Fuel Pass (TFP) ஐ அறிமுகப்படுத்துகிறது.

TFP என்பது NFC அடிப்படையிலான சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டையாகும். இதனை எந்தவொரு சம்பத் வங்கி கிளையிலும் வெளிநாட்டு நாணயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 

Tourist Fuel Pass, MilleniumIT ESP ஆல் உருவாக்கப்பட்ட Touch Fuel Platform மூலம் இயக்கப்படுகிறது மற்றும் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனம் (Ceypetco) மற்றும் Lanka IOC (LIOC) எரிபொருள் நிலையங்களின் ஊடாக அணுக முடியும்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை மத்திய வங்கியினால் ஒற்றை நோக்கத்திற்காக சேமிக்கப்பட்ட பெறுமதியான Tourist Fuel Pass அட்டைகளை வழங்குவதற்கு வசதியாக கொடுப்பனவு அட்டைகளை வழங்குபவராக உரிமம் பெற்றுள்ளது.

Touch Fuel solution இனை 300 CPC மற்றும் LIOC விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன், மேலும் 2022 ஒக்டோபர் இறுதிக்குள் 500 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 

சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 229 சம்பத் வங்கி கிளைகளிலும் Tourist Fuel Pass இனை 5 அமெரிக்க டாலருக்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

சுற்றுலாப் பயணிகள் மேலதிக தகவல்களை https://fuelpass.gov.lk/touristpass ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும் அட்டை தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு 24 மணிநேர துரித இலக்கமான 1393 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தலாம்.

Tourist Fuel Pass குறைந்தபட்சம் 50 அமெரிக்க டாலருக்கும் மற்றும் அதிகபட்சம் 300 அமெரிக்க டாலருக்குமான Top up பெறுமதிகளை அனுமதிக்கின்றது. 

இதற்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தின் ஊடாகவும் செலுத்தலாம். பின்னர் அது நாளின் நடைமுறையில் உள்ள அந்நிய செலாவணி விகிதத்தில் இலங்கை ரூபாவிற்கு சமமானதாக மாற்றப்படும். 

கார்ட் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், தவறவிடப்பட்ட அல்லது சேதமடைந்த அட்டையை நாடளாவிய ரீதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ள முடியும்.

 இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் காஞ்சன விஜேசேகர, “இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக Tourist Fuel Pass ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி மற்றும் டயலொக்கின் தொழில்நுட்ப பங்காளரான MillenniumIT ESP, CPC மற்றும் LIOC ஆகியவவைஒன்றிணைந்து இந்த தளத்தை அறிமுகப்படுத்தி யதற்காக நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

எமது அழகிய நாட்டிற்கு வருகை தரும் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது மற்றும் TFP இன் தொடக்கமானது ஆரம்பிக்கப்பட்டமையானது அந்த திசையில் அத்தகைய ஒரு முயற்சியாகும்”.

 Tourist Fuel Pass குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள், ”சுற்றுலாப் பருவ காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. 

டயலொக் ஆசிஆட்டா மற்றும் சம்பத் வங்கி ஆகிய இரு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் நாங்கள் பலமான நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்கள் இந்த நாட்டின் பெருநிறுவனத் துறையில் இரு பெரும் நிறுவனங்களாகவும், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இரு பெரும் முதலீட்டாளர்களாகவும் உள்ளனர்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு முன்னுரிமையளிக்கும் இலங்கையர்களாகிய நாம் அனைவரும் விரும்பும் எமது அழகிய தீவின் பெறுமதியை உலகிற்கு வெளிப்படுத்த தனிநபர்களாகவும் நிறுவனங்களாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என மேலும் கூறினார்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, சவால்களை சமாளித்து வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் “டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தனியார் துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பிற்காக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். 

Tourist Fuel Pass’ solution இனை எளிதாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் வரவிருக்கும் சுற்றுலாப் பருவ காலத்தில் TFP ஐ சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியதற்காக எங்கள் பங்காளர்களான சம்பத் வங்கி, MIT, Ceypetco மற்றும் IOC ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் நந்தா பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் “இந்த புதிய முயற்சியில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் புதிய Tourist Fuel Pass (TFP) க்கான பிரத்தியேக வங்கிப் பங்காளராக இணைந்தமையினையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது, நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தின் வருகைக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டை சுற்றிப் பயணிப்பதற்கான வசதி மற்றும் எரிபொருள் கிடைப்பதைக் உறுதிப்படுத்துகின்றது.

இந்த நிச்சயமற்ற காலங்களில் எங்கள் நாட்டிற்கு ஆதரிப்பதற்காக இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கும் எங்கள் தேசம் புத்துயிர் பெறுவதற்கும் உதவுவதை நாங்கள் பாக்கியமாக கருதுகின்றோம்.

CPC யின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த டி சில்வா தனது கருத்துக்களை வெளிப்படுத்தியபோது, “எல்லா பங்காளர்களுடனும் இணைந்து Tourist Fuel Pass (TFP) இனை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம் எதிர்கால சுற்றுலாத் துறைக்கு உற்சாகமளிக்க முடிந்ததையிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெருமை கொள்கிறது. 

எங்களுடைய அழகான நாட்டில் தங்கியிருக்கும் போது சுற்றுலாப் பயணிகள் சுமையின்றி மற்றும் எவ்விதமான கவலைகளும் இன்றி நட்பு ரீதியாக ஆராய்வது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது. Tourist Fuel Pass ஐ அறிமுகப்படுத்தும் இந்த பயணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கைகோர்த்த அனைத்து நிறுவனங்களுக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்த நடவடிக்கை எதிர்கால சுற்றுலாத் துறையை ஒரு புதிய கட்டத்திற்கு இட்டுச் செல்லும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய வழிமுறைகளை திறக்கும் என்று நான் விரும்புகின்றேன்.

LIOC இன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா கருத்து தெரிவிக்கையில், விருந்தினர் கடவுளை ஒத்தவர்கள். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி மற்றும் டயலொக்கின் தொழில்நுட்ப பங்காளரான Millennium IT ESP ஆகியவற்றுடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tourist Fuel Pass ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்த Pass அனைத்து LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் உத்தரவாதத்தை வழங்குகிறது. பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையின் தேவை அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கும், எங்கள் தேசத்தில் தங்கள் விடுமுறையை அனுபவிக்கவும் இந்த Tourist Fuel Pass சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நம்புகிறோம்" இம்முயற்சி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்திய MillenniumITESP இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெவன் குணதிலக்க, “தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுளா பயணிகள் இலங்கைக்கு வருவதனை ஊக்குவிப்பதில் பங்களிக்கும் ‘Tourist Fuel Pass’ வசதியை வழங்கும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சகம், சுற்றுலா மற்றும் நில அமைச்சகம்இ டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, Ceypetco மற்றும் IOC ஆகியவற்றுக்கு இடையேயான நம்பமுடியாத பங்காளித்துவத்தால் இந்த அறிமுகம் சாத்தியமாகியுள்ளது. தேசிய நெருக்கடியை தணிக்க தொழில்நுட்பம் எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புகளை விரைவாக உருவாக்க முடியும் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.

Tourist Fuel Pass அறிமுகம்

படத்தில் இடமிருந்து வலம் : CPC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சுசந்த டி சில்வா, CPC இன் தலைவர் மொஹமட் உவைஸ், MillenniumIT ESP இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெவன் குணதிலக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ, சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் - நியமனம் அயோத்யா இத்தவெல பெரேரா, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ.காஞ்சன விஜேசேகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் கௌரவ. ஹரின் பெர்னாண்டோ, மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. இந்திக அனுருத்த, மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்,கௌரவ. D V சானக, LIOC இன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தலைவர் சாலக கஜபாகு, சம்பத் வங்கியின் உதவி பொது முகாமையாளர் - கம்பனி செயலாளர் லசந்த சேனாரத்ன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X