2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மின் ஒழுக்குகள் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் 'களனி அறிவு செயலமர்வு 2013'

A.P.Mathan   / 2013 மார்ச் 06 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல் தர வயர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான, களனி கேபிள்ஸ் பிஎல்சியின் மூலம், எதிர்காலத்தில் மின் ஒழுக்குகள் மற்றும் இலத்திரனியல் சார் விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது குறித்து சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் நுட்பங்களை ஆராயும் வகையில் அமைந்த செயலமர்வு ஒன்றை பத்தரமுல்லை – வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. வருடாந்தம் களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் 'களனி அறிவு செயலமர்வு' நிகழ்வின் இந்த ஆண்டுக்கான நிகழ்வாக இது அமைந்திருந்தது. இந்த தலைப்பில், இந்த துறையில் இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு செயலமர்வாக இது அமைந்துள்ளதுடன், இந்த துறைசார்ந்த முன்னணி இலத்திரனியல் பொறியியலாளர்களின் மூலம் இந்த துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் புதிய நுட்பங்களின் அறிமுகங்கள் குறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 250க்கும் அதிகமான இலத்திரனியல் பொறியியலாளர்கள், திட்ட முகாமையாளர்கள், பொது முகாமையாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த முகாமைத்துவ பணிப்பாளர்கள் இந்த களனி அறிவு செயலமர்வு 2013 நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட துறைசார் நிபுணத்துவம் பெற்ற முன்னணி பொறியியலாளர், பங்குபற்றியிருந்தவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் மின்கட்டமைப்புகளை உதாரணங்களாக காண்பித்து, எவ்வாறு மக்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதிப்பிலாத வகையில் மின்கட்டமைப்பு முறைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், இதற்காக சம காலத்தில் காணப்படும் அபிவிருத்தியடைந்த நுட்ப முறைகள் குறித்தும் விளக்கியிருந்தார்.


இலங்கையிலும், உலக நாடுகளிலும், மின் ஒழுக்குகளின் மூலம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்தக வண்ணமுள்ளது. இதற்கு பிரதான காரணம், மின்கட்டமைப்புகளை நிறுவுவது குறித்து போதிய அறிவின்மையாகும். இதனை அடிப்படையாக கொண்டே களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சி திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் சூத்திரதாரி என வர்ணிக்கப்படும் களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் காணப்படும் முன்னணி கேபிள் தயாரிப்பு நிறுவனம் எனும் வகையில், எமது வியாபாரத்துடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன், இந்த துறையில் இடம்பெறும் நவீன மாற்றங்கள், புதிய அறிமுகங்கள் குறித்து பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக கருதுகிறோம். பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். எமது சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.  எமது பாரிய சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓரங்கமாக இந்த வருடாந்த நிகழ்வு அமைந்துள்ளது. இம்முறை நாம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நிபுணத்துவம் பெற்ற பொறியியலாளரை நாம் சிறப்புரை வழங்க அழைத்து வந்திருந்தோம். ஏனெனில் அவர் இந்த துறையில் உலகளாவிய ரீதியில் அனுபவம் வாய்ந்தவர். மக்களுக்கும், சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைந்த மின் கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்கு தேவையான அறிவை, இது போன்ற நிகழ்வுகளின் மூலம் வழங்க முடியும என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இல்த்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .