2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

விமான சேவை வழங்குநர் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 30.9 பில்லியன் ரூபா நிலுவை

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலங்கையின் இரு பிரதான விமான சேவை வழங்கும் நிறுவனங்களான ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கர் போன்றன சுமார் 30.9 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆங்கில வார வெளியீடொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை மூலம் 28.3 பில்லியன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை உள்ளதாகவும். மானிய விலையிலேயே தற்போதும் மின்சார சபைக்கு எரிபொருளை தாம் விநியோகித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகித்து இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மேலும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், கடந்த ஆண்டில் வங்கிகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகைக்கான வட்டியாக மட்டும் 18 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .