2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகிய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 25.2 வீத அதிகரிப்பை பதிவு செய்து 133,971 ஆக பதிவாகியிருந்தது. 
 
நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் பதிவாகியிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 24.7 வீதத்தால் அதிகரித்து 861,324 ஆக பதிவாகியிருந்தது. 
 
இதில் சீனாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 144.2 வீதத்தால் அதிகரித்து 82,815 ஆக பதிவாகியிருந்தது.
 
இதேவேளை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X