2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கடந்த ஆண்டின் மொத்த வரி வருமானத்தின் 56 வீதம் அரச ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது

A.P.Mathan   / 2013 ஜூன் 11 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த வரி வருமானத்தில், 56 வீதத்தை அரச துறையை சேர்ந்த ஊழியர்களின் சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்குவதற்காக அரசு செலவிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சின் வெளியிடப்பட்டிருந்த ஆய்வறிக்கையில், கடந்த ஆண்டு 1.79 மில்லியன் அரச துறை சார்ந்த ஊழியர்களுக்கென மொத்தமாக 348 பில்லியன் ரூபா சம்பளக் கொடுப்பனவுகளாக மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதர அனுகூலங்களான எரிபொருள் கொடுப்பனவு, சொத்து கடன், சேமலாப நிதியம் மற்றும் மருத்துவ காப்புறுதி கொடுப்பனவு போன்ற செலவீனங்கள் மொத்த செலவீனத்தை 415 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. இதில் மேலும் 111 பில்லியன் ரூபா ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான தொகையாக பதிவாகியிருந்ததுடன் மொத்த தொகை 516 பில்லயன் ரூபாவாக அதிகரித்திருந்தது.
 
கடந்த ஆண்டு மொத்த வரி வருமானம் 7.4 வீதத்தால் அதிகரித்து 908 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாக நிதி அமைச்சியன் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .